இலங்கையின் 76வது சுதந்திர தினம்
இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்று.
இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்று.
காலி முகத்திடலில் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்றைய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு இராஜதந்திரிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அதன்படி, 76ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக தாய்லாந்து பிரதமர் ஷ்ரேதா தவிசின் கலந்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.