சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்கு தேவையான வாகனங்களை இறக்குமதி
நாட்டில் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான பிரேரணை அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான பிரேரணை அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுமார் 1,000 வேன்களையும் மகிழுந்துகளையும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
குறித்த பிரேரணைக்கு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கப் பெறும் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.