நானுஓயா - ரதெல்ல பகுதியில் பேருந்து கவிழந்து விபத்து
நானுஓயா - ரடெல்ல குறுந்தொகை வீதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நானுஓயா - ரடெல்ல குறுந்தொகை வீதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
மாத்தறை பிரதேசத்தில் இருந்து சிவனொளிபாதமலை நோக்கிய பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துகுள்ளாகியுள்ளது.
பஸ்ஸில் சென்ற எட்டு பேர் பலத்த காயங்களுடன் பொதுமக்கள் மற்றும் போலீசாரின் உதவியோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் விபத்தில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.