அதிர்ச்சி செய்தி - மற்றுமொரு துப்பாக்கிச்சூடு!
குருநாகல் - தொடங்கஸ்லந்தவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தை இலக்கு வைத்து நேற்று (24) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல் - தொடங்கஸ்லந்தவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விகாரையை இலக்கு வைத்து நேற்று (24) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விகாரையின் பிரதமகுருவான வண. கல்நேவே பன்னகித்தி தேரர் அங்கு வசித்தாலும், பிக்கு துப்பாக்கிச் சூட்டில் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளைப் போல் பாவனை செய்து இனந்தெரியாத நான்கு நபர்களால் பௌத்த பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு நாளின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.