தொடருந்து விபத்தில் மூவர் பலி
ஆராய்ச்சிக்கட்டுவ – மய்யாவ பகுதியில் தொடருந்து விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
ஆராய்ச்சிக்கட்டுவ – மய்யாவ பகுதியில் தொடருந்து விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
தொடருந்து ஒன்றுடன், உந்துருளி ஒன்று மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த விபத்தில் தாய் மற்றும் அவரது மகள் ஆகியோருடன் மற்றுமொரு சிறுமி ஒருவரும் உயிரிழந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
சடலங்கள் முந்தலம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராய்ச்சிக்கட்டுவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.