இடைநிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி

யாழ்ப்பாணத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி சற்று நேரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இடைநிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி

யாழ்ப்பாணத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி சற்று நேரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் முன்னனி பாடகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் பங்குபற்றும் குறித்த நிகழ்ச்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில் இன்று (09.02.2024) நடைபெற்றுள்ளது.

இதன்போது இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த மக்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதால் அங்கு சனநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதனையடுத்து ஏற்பட்ட குழப்ப நிலையை பொலிஸார் கட்டுப்படுத்தும் வரையில் இசை நிகழ்ச்சியானது சில நிமிடங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.