முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு

புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு

புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது தேவிபுரம் ஆ பகுதியினை சேர்ந்த 55 வயதுடைய சி.சிவபாஸ்கரன் என்பரே உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு தெங்கு பனைகூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக கள்ளு இறக்கும் தொழில் செய்துவரும் குறித்த நபர் நேற்று(17) மாலை கள்ளினை இறக்கி தவறனைக்கு கொண்டு சென்றுகொடுத்துவிட்டு திரும்பும் வழியில், 

வீதியில் குறுக்கே விழுந்து கிடந்த மரக்கட்டையில் அவர் பயணித்த உந்துருளி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.