நீருக்கு அடியிலான முதலாவது மெட்ரோ தொடருந்து சேவை

இந்தியாவின் நீருக்கு அடியில் முதலாவது மெட்ரோ தொடருந்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.

நீருக்கு அடியிலான முதலாவது மெட்ரோ தொடருந்து சேவை

இந்தியாவின் நீருக்கு அடியில் முதலாவது மெட்ரோ தொடருந்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்நிலையில் கொல்கத்தாவின் கிழக்கு - மேற்கு மெட்ரோ தொடருந்து மார்க்கத்தில் ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் ஆகிய நகரங்களுக்கு இடையே நீருக்கு அடியில் இந்த தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே 4.8 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த தொடருந்து மார்க்கத்தில் ஹுக்ளி என்ற ஆற்றை கடக்க தரையிலிருந்து 32 மீற்றர் ஆழத்தில் 520 மீற்றர் நீளத்துக்கு இந்த மெட்ரோ தொடருந்து மார்க்கத்தில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 4,965 கோடி இந்திய ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.