சாமியாருக்குள் வந்திறங்கிய கேப்டன் விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்தின் குரலில் சாமியார் ஒருவர் வாக்கு கூறியுள்ளார்.

சாமியாருக்குள் வந்திறங்கிய கேப்டன் விஜயகாந்த்

தேமுதிக தலைவரும் இந்திய பிரபல நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி  மரணமடைந்த நிலையில், அவரது குரலில் சாமியார் ஒருவர் வாக்கு கூறியுள்ளது வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் அமரர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் திகதி உடல்நலக் குறைவினால் காலமானார்

விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொது மக்களும், ரசிகர்களும்கலந்துகொண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர்.

இதனைதொடர்ந்து அவரது நினைவிடத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வரும்நிலையில், நேற்றைய தினம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்திற்குமுன்பாக அன்னதானம் வழங்கியுள்ளனர்.

குறித்த இடத்திற்கு வந்த ஒரு சாமியார்கேப்டன் எங்கும் போகவில்லை, உங்கள் மூத்தமகன் உருவில்உங்களுடன் இருக்கிறார்என்று தெரிவித்துள்ளார்.

பின்பு தொடர்ந்து திடீரென அருள் வந்தது போல் கேப்டன் குரலில் பேசிய அவர், என்னை பத்தி தெரியுமில்ல? இந்த ஏழை எளிய மக்களை விட்டுட்டு நான் எங்க போகப் போறேன். பிரேமா பூவையும், பொட்டையும்எடுக்கக்கூடாது. உன் இதயத்தில் தான் நான் குடியிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதைக் கேட்ட பிரேமலதா ஒரு கணம் நெகிழ்ந்து கண்கலங்கியுள்ளார்

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.