பிக்போஸ் வீட்டில் நடப்பது என்ன
பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ரவீனா மகிழ்ச்சியாக மணியிடம் பேச சென்ற போது அவர் அவரை பேசாமல் தவிர்த்து சென்றுள்ளார்.
பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ரவீனா மகிழ்ச்சியாக மணியிடம் பேச சென்ற போது அவர் அவரை பேசாமல் தவிர்த்து சென்றுள்ளார்.
பிரபல டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 100 நாட்களை கடந்து செல்கின்றது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன், விசித்ரா, பூர்ணிமா என 18 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது 100 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.
இன்னும் சில தினங்களில் முடிவடையும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்கனவே வெளியேறிய பழைய போட்டியாளர்கள் தற்போது வருகை தந்துள்ளனர்.
இன்று ரவீனா உள்ளே வந்த நிலையில், ஆசையாக மணியிடம் வந்து பேச வந்த போது அவர் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுள்ளார். இதனால் எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருந்த ரவீனா கண்கலங்கும் நிலைக்கு சென்றுள்ளார்.