இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
எதிர்வரும் 14ஆம் திகதி ஒரு லட்சத்து 35000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி ஒரு லட்சத்து 35000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.