சாந்தனின் பூதவுடல் இன்று மக்கள் அஞ்சலிக்கு
இந்தியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் இன்று காலை 8 மணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் இன்று காலை 8 மணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாந்தனின் பூதவுடல் 9 மணியளவில் மாங்குளம் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து முற்பகல் 10.30க்கு கிளிநொச்சி பசுமை பூங்காவில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த ஊரான உடுப்பிட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2மணி முதல் 3மணிவரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
அதன்பின்னர், இன்று மாலை அவரது பூதவுடல், அவரது சொந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளைய தினம் எள்ளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தன் என்ற சுதேந்திர ராசா சென்னையில் வைத்து கடந்த 28ஆம் திகதி காலமானார்.
குறித்த கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த சாந்தன் விடுவிக்கப்பட்டு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பை அடுத்து அவர் திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.