அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைக்கப்படும்
Government institutions will be restructured
அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசகுறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் மக்களுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய வகையில், அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நட்டமடையும் நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களில் பணியாற்றி வரும் பணியாளர்களது உரிமைகளை பாதிக்காத வகையில் மறுசீரமைப்புநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வரிச் செலுத்துவோரின் பணத்தைக் கொண்டு நட்டமடையும் நிறுவனங்கள் முன்னெடுப்பதில்பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.