அனைத்து மருந்து நிறுவனங்கள் தொடர்பிலும் விசாரணை
நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மருந்து நிறுவனங்கள் தொடர்பிலும் விசாரணைகளைமேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மருந்து நிறுவனங்கள் தொடர்பிலும் விசாரணைகளைமேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி தலைமையில் நடைபெற்றகூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்மையில் மருந்து ஊழலில் ஈடுபட்டதாக மருந்துகள் விநியோகித்த நிறுவனங்கள் மீதுஅதிகாரிகள் மேலதிக விசாரணைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மனித இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் முன்னாள்செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட 8 பேர் தற்போது இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.