முல்லைத்தீவுக்கு புதிய பேராபத்து
முல்லைத்தீவில் சுற்றுச் சூழலை பாதிக்கும் வகையில் ஜஸ் தொழிற்சாலை இயங்கி வருகின்றது.
முல்லைத்தீவில் சுற்றுச் சூழலை பாதிக்கும் வகையில் ஜஸ் தொழிற்சாலை இயங்கி வருகின்றது.
முல்லைத்தீவு நகரில் கோவில்குடியிருப்பு கிராமத்தில் மக்கள் வாழும் பகுதியில் சுற்றுச் சூழலை பாதிப்பதாகவும் நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் அமைக்கப்பட்ட ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது.
பெரும்பான்மை இனத்தவர் ஒருவரினால் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இத்தொழிற்சாலை நடாத்தப்படுகின்றது.
இத்தொழிற்சாலைக்கு என அருகில் உள்ள தமிழர் நிலங்களை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
மன்னாரில் இவரின் ஐஸ் உற்பத்தி நிலையத்திற்கு சுற்று சூழல் பிரச்சனை ஏற்படவே முல்லைத்தீவில் தனது உற்பத்தி செய்யும் ஐஸ் கட்டிகள் மன்னாருக்கும் வவுனியாவிக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றார்.
இத்தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் இரசாயன கழிவுகள் நிலத்துடன் கலக்கின்றன. இது எதிர்காலத்தில் பாரிய சூழலியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட காணியில் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு மேலும் பாரிய தொழிற்சாலை விஸ்தரிக்கப்பட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட்டு ஏனைய மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கைகள் துரிதப்படுத்தபட்டு வருகின்றன.
ஆழ்துளை குழாய் கிணறுகள், அயலில் காணிகளில் உள்ள கிணறுகளில் என தற்பொழுது நீர் நாளாந்தம் 36.000 லீற்றரும் பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் புதிதாக நாளாந்தம் 120.000 லீற்றர் நீரும் நிலத்தடியில் உறிஞ்சப்படுகின்றது.
இரசாயன கழிவுகள் மண்ணில் வீசப்படுகின்றது. நூறு மீற்றர் தொலைவில் கடல் அமைந்துள்ளதனால் உவர் நீர் உட்புகுதல் என அபாயம் எழுந்துள்ளது. இதனை தடுக்க அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடரும் நிலத்தடி நீர் சூழலை மாசுபடுத்தும் செயல்பாட்டிக்கு எதிராக பொது அமைப்புகள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், நலன்விரும்பிகள் இணைந்து மாவட்ட அரச அதிபர், சுற்றுசூழல் அதிகாரசபை ஆகியவற்றை நாடியுள்ளனர்.
2012 ஆம் ஆண்டில் இவ் ஐஸ் தொழிற்சாலை இயங்கத் தொடங்கிய போது எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. முல்லைத்தீவு நாயாற்றினிலே இத்தொழிற்சாலை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஏற்கனவே வற்றாப்பளையில் இருந்து முல்லைத்தீவு நகரத்திற்கான குடிநீர் வழங்கல் வேலைகள் இடம் பெற்று வரும் நிலையில் இத்தொழிற்சாலையினால் முல்லைத்தீவு நகரம் நிலத்தடி நீர் ஆபத்தினை எதிர்கொண்டுள்ளதுடன் கடல் நீரும் உட்புகும் அபாயம் எழுந்துள்ளது.