பயங்கர காட்டுத்தீ: 20000 எக்டேர் பகுதி சேதம்
சிலியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை சுமார் 20000 எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
சிலியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை சுமார் 20000 எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
இந்நிலையில் தென் அமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
இந்த தீ அங்குள்ள ஏனைய பகுதிகளுக்கும் வேகமாக பரவியுள்ளது.
இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர்.
அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை தெளித்து தீயை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.
இந்த காட்டுத்தீயால் இதுவரை சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள அரிய வகை தாவரங்கள், விலங்கினங்கள் தீயில் கருகி மடிந்தன.
அதனை சுற்றியுள்ள எஸ்ட்ரெல்லா, நவிடாப் ஆகிய பகுதிகளுக்கும் இந்த தீ பரவியது. இதில் அங்குள்ள 1,200 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ள