இந்திய அரசு இலங்கை அரசாங்கத்திடம்  கோரிக்கை

இந்திய அரசு, இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கை அரசாங்கத்திடம்  கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. 

இந்திய அரசு இலங்கை அரசாங்கத்திடம்  கோரிக்கை

இந்திய அரசு, இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கை அரசாங்கத்திடம்  கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. 

இந்நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான ஆக்கபூர்வமான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இருதரப்பு மீனவர்களின் நலன்சார்ந்து மனிதாபிமான முறையில் மீனவர் பிரச்சினையை அணுகுமாறு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.