ஏழு ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின், உறவுகளால்  தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதையொட்டி பேரணி ஒன்று நடாத்தப்படவுள்ளது.

குறித்த பேரணியானது, நாளைய தினம் (20.02.2024) கந்தசாமி கோயில் முன்றலில் தொடங்கி கிளிநொச்சி டிப்போச்சந்தி வரை நடைபெறவுள்ளது.

இதுவரை காலமும் போராட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆதரவும், ஊக்கமுமே மனவலிமையுடன் போராட்டத்தை கொண்டு நடாத்த உதவியுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.