ஆப்கானிஸ்தானில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலிள் 6.4 ரிக்டருக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.50 மணியளவில் 206 கிலோமீட்டர் ஆழத்தில், இந்து குஷ் மலைத்தொடரில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஆப்கானிஸ்தான் நகரங்களான காபூல், தகார், லக்மான், குனார் மற்றும் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.