ஈராக் மற்றும் சிரியா மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்

ஈராக் மற்றும் சிரியா மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன.

ஈராக் மற்றும் சிரியா மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்

அண்மையில் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி 3 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக் மற்றும் சிரியா மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன.

இது குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீதான தாக்குதல் ஈரானின் ஆதரவுடன் ஆயுதமேந்திய குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள சந்தேகத்திற்கிடமான 85 இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இந்நிலையில் 30 நிமிடங்களில் அமெரிக்க போர் விமானங்கள் அந்த இடங்களில் 125 குண்டுகளை வீசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலுக்கு பின்னதாக ஈராக், சிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய கிழக்கில் போரை தீவிரப்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளன.

இதனிடையே, அமெரிக்காவின் பதில் நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும், தேவையான நேரத்தில் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேலும் தெரிவித்துள்ளார்.