பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள முக்கிய தகவல்
நாடளாவிய ரீதியில் சிவில் உடையில் போக்குவரத்துச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டாம்
நாடளாவிய ரீதியில் சிவில் உடையில் போக்குவரத்துச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நாரம்மலை பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த 41 வயதுடைய ரொஷான் குமாரதிலக்கவின் வீட்டிற்கு நிவாரணம் வழங்குவதற்காக பதில் பொலிஸ்மா அதிபர் இன்று காலை குறித்த இடத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.