வைக்கோல் குவியலில் ஏற்பட்ட தீயில் விழுந்து நபரொருவர் பலி
ஹொரண மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலகல தல்கஹவத்த பகுதியில் வைக்கோல் குவியலில் ஏற்பட்ட தீயில் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்
ஹொரண மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலகல தல்கஹவத்த பகுதியில் வைக்கோல் குவியலில் ஏற்பட்ட தீயில் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
வீடொன்றின் பின்னால் வேலை செய்து கொண்டிருந்த நபரே இன்று (01) காலை இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 76 வயதுடையவர் என மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குறித்த வீட்டில் கொட்டகை ஒன்றை அமைக்க வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, வீட்டின் உரிமையாளர் அவருக்கு பணி ஒதுக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்த்த போது வைக்கோல் குவியல் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதனை அணைக்க முற்பட்ட போது குறித்த நபர் வைக்கோலில் கிடப்பதைக் கண்டுள்ளார்.
பின்னர் அவர் உடனடியாக அதிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன் மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.