ஐவர் சுட்டுக்கொலை! மேலும் இருவர் கைது
பெலியத்த தெற்கு அதிவேக நுழைவாயில் பகுதியில் அரசியல்வாதியான சமன் பெரேரா உள்ளிட்ட ஐவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் மனைவி மற்றும் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலைச் சம்பவத்திற்கான திட்டங்களை வகுத்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான ஓய்வு பெற்ற கடற்படை சிப்பாய், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட மறுதினம் வெளிநாடு ஒன்றிற்கு தப்பிச்சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.