CIDயில் ஆஜராகும் கெஹெலிய ரம்புக்வெல்ல
முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இன்றைய தினம் இவர் முன்னிலையாகவுள்ள நிலையில், நாட்டுக்கு 22,500 தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக அவர் நேற்றைய தினம் அழைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் அவர் நேற்றைய தினமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை.
இந்தநிலையில், அவரை இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலத்தை வழங்குமாறு நேற்றைய தினம் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.