தமிழனின் பாரம்பரியத்தை காக்க விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

தமிழனின் பாரம்பரியமான பண்பாட்டையும் தாய் மொழியையும் கலைகளையும் காத்திட முன்வாருங்கள்

தமிழனின் பாரம்பரியத்தை காக்க விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

தமிழனின் பாரம்பரியமான பண்பாட்டையும் தாய் மொழியையும் கலைகளையும் காத்திட முன்வாருங்கள் என கலாநிதி ஆறு.திருமுருகன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

பொங்கல் வாழ்த்து செய்தியில் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சைவத்தமிழ் மக்களின் பண்டிகைகளில் தைப்பொங்கல் விழா முதன்மையானது.

இயற்கைத் தெய்வமாகிய சூரியனுக்கு பொங்கிப்படைத்து நன்றி சொல்லுவதுடன், பாடுபட்டு உழைக்கும்உழவர் பெருமக்களுக்கும் நன்றி கூறும் நாளாக இந்நாள் கருதப்படுகிறது.

முற்றத்தில் குடும்பமாகப் பொங்கிப் படைத்து உறவினர், நண்பர்களுக்கு உணவை பகிர்ந்து அன்பைப்பெருக்கும் பண்பாட்டு நாளாக தைத்திருநாளை எம்முன்னோர் காத்து வளர்த்தனர்.

எனவே அனைத்து மக்களும் வீட்டு முற்றத்தில் பொங்கிப் படையுங்கள்.

எமது பாரம்பரியமான இவ்விழாவைச் சிறப்பாகப் பேணி எமது தலைமுறை பின்பற்ற வழி செய்யுங்கள் எனகோரிக்கை முன்வைத்துள்ளார்.