மின்கட்டணத்தை குறைந்தபட்சம் 33 சதவீதமாவது குறைக்க வேண்டும் என பொருளாதார நெருக்கடியின் பாதிப்பை தணிக்கும் துறைசார் கண்காணிப்பு குழு , இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளது.
குறித்த குழு நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மின் கட்டண அதிகரிப்பு காரணமாக நாடளாவிய ரீதியில் 10 லட்சத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், மின்கட்டண நிலுவைத் தொகையை தவணை முறையில் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதன்போது பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
What's Your Reaction?