கொக்குதொடுவாய் மனித புதைகுழியின் 3ஆம் கட்ட அகழ்வு பணி
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றையதினம்(22) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றையதினம்(22) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல்கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகியது.
தொடர்ந்து பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில்இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்றுஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று 40 எலும்புக்கூட்டு தொகுதிகள்மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிப்பது தொடர்பில் இன்றையதினம் வழக்குஎடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.