சாந்தனின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

சாந்தனின் பூதவுடல்  சற்றுமுன்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சாந்தனின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

சாந்தனின் பூதவுடல்  சற்றுமுன்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கல்லீரல் செயலிழப்பு மற்றும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், பெப்ரவரி 28ஆம் திகதி அதிகாலை சாந்தன் காலமானார்.

இந்நிலையில் அவரது உடல் கடந்த வெள்ளிக்கிழமை விமானம் வழியாக கட்டுநாயக்க விமான நிலையம் எடுத்து வரப்பட்டு, உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் உடல் எடுத்து செல்லப்பட்டது. வவுனியா, மாங்குளம், கிளிநொச்சி, பளை, கொடிகாமம் என பல இடங்களிலும் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த ஊரான உடுப்பிட்டிக்கு எடுத்து செல்லப்பட்டது.