மாணவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 8 கடை உரிமையாளர்கள் கைது

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளுக்கு அருகில் உள்ள 8 கடை உரிமையாளர்களை ஹிக்கடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாணவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 8 கடை உரிமையாளர்கள் கைது

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளுக்கு அருகில் உள்ள 8 கடை உரிமையாளர்களை ஹிக்கடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கடை உரிமையாளர்கள் சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்து பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹிக்கடுவ காவல் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் சதகிரியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் 17 வயதுடைய முகவர் ஒருவரை சிகரெட் கொள்வனவு செய்ய பயன்படுத்தி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் கடைகளில் இருந்த சிகரெட் கையிருப்பு பொலிஸாரால் வழக்குப் பொருட்களாகக் கைப்பற்றப்பட்டதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை சட்டத்தின்படி 21 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சிகரெட் விற்பனை செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளுக்கு அருகில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவர்களை இந்த கடைகளின் உரிமையாளர்கள் குறிவைத்து வருகின்றனர்.