அம்பாறையில் வயோதிபரின் சடலம் மீட்பு
அம்பாறை - பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாறை - பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் இன்று (12.02.2024 ) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என சடலத்தை நேரில் கண்டவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர் 50 அல்லது 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.