இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார் சபாநாயகர்

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தில் கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார் சபாநாயகர்

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தில் கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.

இன்றைய தினம் குறித்த சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, இணைவழி பாதுகாப்பு சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.

கடந்த ஜனவரி மாதம் 23ம் மற்றும் 24ம் திகதிகளில் அது தொடர்பான விவாதம் நடைபெற்றதுடன், குறித்த சட்டமூலம் திருத்தங்களுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சியினர், சர்வதேச தரப்பினர், சமூக ஆர்வலர்கள் தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.