மர்மமான முறையில் ஆண் ஒருவர் பலி
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
காலி, தலகஹஹேன பதுமங்க பகுதியைச் சேர்ந்த பிரபாத் சாமர சம்பத் என்ற 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வைத்தியரின் மனைவியும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஆவார்.
சம்பவம் இடம்பெற்ற போது மனைவி வீட்டில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த வைத்தியரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய சட்ட வைத்திய பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காலி பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.