கழிவு கால்வாயில் பாய்ந்து தப்பிக்க முயன்ற 45 வயதான பெண் கைது

பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது, கழிவு கால்வாயில் பாய்ந்து தப்பிக்க முயன்ற 45 வயதான பெண்ணொருவர் கைதானார்.

கழிவு கால்வாயில் பாய்ந்து தப்பிக்க முயன்ற 45 வயதான பெண் கைது

பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது, கழிவு கால்வாயில் பாய்ந்து தப்பிக்க முயன்ற 45 வயதான பெண்ணொருவர் கைதானார்.

பொலிஸார் மேற்கொண்ட கடும் பிரயத்தனத்தை அடுத்து அவர் கைதானார்.

கைதானவர் அன்னமலே செல்வராணி என்று அழைக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் என காவல்துறை தெரிவித்துள்ளது.

பொலிஸாரால் குறித்த பெண்ணின் மட்டக்குளி கதிரானவத்தை பகுதியிலுள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற பெண் அருகிலுள்ள கழிவு கால்வாயில் பாய்ந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை மீட்பதற்காக மேலதிக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதுடன் கடும் பிரயத்தனத்தை அடுத்து குறித்த பெண் கைதானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதானவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதி வாய்ந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.