கலிபோர்னியா பனிப்புயல் உருவாகும் அபாயம்
அமெரிக்கா - கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சியரா நெவாடா பகுதியில் பெரும் பனிப்புயல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா - கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சியரா நெவாடா பகுதியில் பெரும் பனிப்புயல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக யோசெமிட்டி தேசிய பூங்கா உள்ளிட்ட சில பகுதிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளில் 10 அடி வரை பனிப்பொழிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் நெவாடா மலைப்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 225 கிலோமீட்டர் வரை உயரக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.