200 பேருந்துகள் மீண்டும் சேவையில்

நாடளாவிய ரீதியில் சேவையில் இருந்து நீக்கப்பட்ட 200 பேருந்துகளை புதுப்பித்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

200 பேருந்துகள் மீண்டும் சேவையில்

நாடளாவிய ரீதியில் சேவையில் இருந்து நீக்கப்பட்ட 200 பேருந்துகளை புதுப்பித்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தை அண்மித்த ஜப்பான் நட்புறவு வீதிக்கு அருகில் இன்று குறித்த நடவடிக்கை இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள 107 இலங்கை போக்குவரத்து சபை சாலைகள் மற்றும் 11 பிராந்திய வேலைத்தளங்களைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் இந்தப் பேருந்துகளை புதுப்பித்துள்ளனர்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, சாமர சம்பத் தசநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட ஆகிய பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.