ஒன்பது வயது சிறுவனை இழுத்துச்சென்ற முதலை

ஒன்பது வயதுச் சிறுவனை முதலை ஒன்று இழுத்துச் சென்றுள்ளது.

ஒன்பது வயது சிறுவனை இழுத்துச்சென்ற முதலை

களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனை முதலை ஒன்று இழுத்துச் சென்றுள்ளது.

கடுவெல வெலிவிட்ட பகுதியில் வசிக்கும் ஒன்பது வயது சிறுவனையே முதலை இழுத்துச்சென்றுள்ளது.

குறித்த சிறுவன் தனது பாட்டியுடன் குளிப்பதற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், பாட்டி மற்றும் சிறுவன் நீராட்டிக் கொண்டிருந்தபோது பாட்டியை திடீரென முதலை ஒன்றுதாக்கி விட்டு சிறுவனைக் இழுத்துச் சென்றுள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சிறுவன் முதலையின் வாயில் சிக்கிக் கொண்டிருந்ததனை தாம்கண்டதாக தெரிவித்தனர்.

சிறுவனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.