சுகாதார ஊழியர்களுக்கு பொருளாதார நீதியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகள், நிதியமைச்சின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று(06) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகள், நிதியமைச்சின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று(06) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணிக்கு நிதி அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரவி குமுதேஷ் இதனை தெரிவித்தார்.
சுகாதார ஊழியர்களுக்கு பொருளாதார நீதியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதியின்பணிப்புரைக்கு அமைய இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.