மருந்தில்லா செவ்வாழையில் உள்ள நன்மைகள்
செவ்வாழை சாப்பிட்டால் பலவித நன்மைகள் கிடைக்கும்
செவ்வாழை சாப்பிட்டால் பலவித நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
செவ்வாழையில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மை பயக்கின்றன.
நார்ச்சத்து உள்ள பழங்களில் செவ்வாழையும் ஒன்றாகும்.
இந்த பழமானது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
செவ்வாழையில் உள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
செவ்வாழையில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
செவ்வாழையில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
செவ்வாழையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு உதவுகிறது.
மேலும் செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு மலச்சிக்கல் மற்றும் இரத்த அழுத்தம் குறையும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் செவ்வாழையை வாரம் ஒரு முறையாவது சாப்பிடுவது நன்மை அளிக்கும்.