காற்றின் தரம் மோசமடைந்துள்ளது

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரம் மோசமடைந்துள்ளது

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) கொழும்பின் காற்று மாசு 127 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலை உணர்திறன் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், காலி கராப்பிட்டியில் 90 ஆகவும், புத்தளத்தில் 88 ஆகவும், குருநாகல் மற்றும் அனுராதபுரத்தில் 86 ஆகவும் காற்று மாசு சுட்டெண் பதிவாகியுள்ளது.