36 மணி நேரம் விரதமிருக்கும் ரிஷி சுனக்

ரிஷி சுனக் கடந்த 2022 ஓக்டோபர் 25 அன்று இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றார்.

36 மணி நேரம் விரதமிருக்கும் ரிஷி சுனக்

ரிஷி சுனக் கடந்த 2022 ஓக்டோபர் 25 அன்று இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றார்.

43 வயதான ரிஷி சுனக் தனது உடலாரோக்கியம் மற்றும் வாழ்க்கைமுறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது .

இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் வாரந்தோறும் 36 மணி நேரம் விரதம் இருப்பதாக இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணி முதல் செவ்வாய்கிழமை காலை 05:00 மணி வரை எதுவும் உண்பதில்லை.

இக்காலகட்டத்தில் நான் குடிநீர், தேநீர் மற்றும் கலோரி இல்லாத பானங்கள் மட்டுமே அருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாரம் ஒரு முறை விரதம் இருப்பது தனது முக்கியமான சுய கட்டுப்பாடு என்றும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார் .