இந்தியா - கேரளாவிலிருந்து விமான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை!

இந்தியா - கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக சில விமான சேவை நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியாவை தளமாக கொண்ட ஏசர் ஏசியா மற்றும் ஃபிட்ஸ் ஏர் உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் தங்களது விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.