பொரளை மெகசீன் சிறைச்சாலைக்கு முன்பாக துப்பாக்கிச்சூடு
பொரளை மெகசீன் சிறைச்சாலைக்கு முன்பாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் துப்பாக்கிச்சூட்டுசம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பொரளை மெகசீன் சிறைச்சாலைக்கு முன்பாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் துப்பாக்கிச்சூட்டுசம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாகமோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் வாடகை அடிப்படையில் வசிக்கும்38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்சில நாட்களுக்கு முன்னர் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டு பிணையில் வந்தவர் என பொலிஸாரின்ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் பொரளை பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.