4 இந்தியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
மனித கடத்தலுக்கு இலங்கையர்களை உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 4 இந்தியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
மனித கடத்தலுக்கு இலங்கையர்களை உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 4 இந்தியர்களுக்கு எதிராக அந்தநாட்டு தேசியப் புலனாய்வு சேவை, பெங்களூர் நீதிமன்றில் துணை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு 39 இலங்கையர்களை, கனடாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி, இந்தியாவிற்கு மனித கடத்தல் செய்தமை தொடர்பான வழக்கிலேயே இந்த நால்வருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.