பரீட்சை வினாத்தாள்கள் வெளியானமை தொடர்பில் அதிரடி விசாரணை

பாடசாலைகளில் நடைபெறவுள்ள தவணைப் பரீட்சை தொடர்பான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியானமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், பரீட்சை வினாத்தாள்கள் வெளியான மாகாணங்களில் மாகாண மட்டத்திலும் விசாரணை நடத்தப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டுக்கான இறுதித் தவணைப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், சில மாகாணங்களில் பரீட்சைக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வெளியாகியுள்ளமையினால் பரீட்சை தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.